ஆரணி பகுதியின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகின்றன. ஆற்காடு-விழுப்புரம் நெடுஞ்சாலை இரு வழி சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், கண்ணமங்கலம் -ஆரணி சாலை மற்றும் ஆரணி -வேலூர் சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளது. ஆரணி-ஆற்காடு சாலை நவீன வசதிகளுடன் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. 3.5 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட்டுள்ள இந்த சாலைகளால் போக்குவரத்து எளிதாகி உள்ளதோடு, நெரிசல் குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Discussion about this post