நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாங்குநேரி தொகுதியில் 36 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதேபோல், விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 24 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கூறினார். 39 தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி சுப்பிரமணியன் கூறினார்.
Discussion about this post