நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவன் உதித் சூர்யாவிற்கு இடைத்தரகராக செயல்பட்ட நபரை பிடிக்க சிபிசிஐடி காவல்துறையினர் கேரளா விரைந்துள்ளனர்.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட உதித் சூர்யா மற்றும் அவரது தந்தையை 15 நாட்கள் காவலில் வைக்க தேனி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ஆள்மாறாட்டம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், உதித் சூர்யாவிற்கு இடைத்தரகராக செயல்பட்ட நபர் கேரளாவில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து உதித் சூர்யாவிற்கு இடைத்தரகராக செயல்பட்ட நபரை பிடிக்க சிபிசிஐடி காவல்துறையினர் கேரளா விரைந்துள்ளனர்.
முன்னதாக, உதித் சூர்யா மற்றும் அவரது தந்தைக்கு அளிக்கப்பட்ட 15 நாள் நீதிமன்ற காவலை அடுத்து, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் மேலும் 5 மாணவர்கள், நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், மும்பையைச் சேர்ந்த கும்பல் ஆள்மாறாட்டத்திற்கு பெரும் பங்கு வகித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.