நீலகிரி மாவட்டத்தில் பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் முதல் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. பனிப்பொழிவில் இருந்து செடி, கொடிகளை பாதுகாக்க விவசாயிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக காலையிலும், மாலையிலும் சொட்டு நீர் பாசனம் மூலம், தண்ணீர் தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தலைகுந்தா, தொட்டபெட்டா மற்றும் தாவரவியல் பூங்கா போன்ற பகுதிகளில் செயற்கை முறையில் தண்ணீர் தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாலை நேரங்களில் கடும் குளிர் நிலவுவதால் பொது மக்கள் தீ மூட்டி குளிரிலிருந்து தங்களை பாதுகாத்து வருகின்றனர்.
Discussion about this post