இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் அனைவருக்கும் பிடித்த வீரரான விராட் கோலி 2017 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு இருவரும் உலகம் முழுவதும் சுற்றிப் பார்க்கும் பிரியர்களாக மாறிவிட்டனர்.இந்த காதல் ஜோடிகளைப் பார்த்து பொறாமை படாதவர்களே இல்லை என்று கூறலாம்.மேலும்,இருவரும் சமூக வலைதளங்களில் தாங்கள் எடுக்கும் புகைப்படத்தினை வழக்கமாக பகிர்ந்து கொள்வர்.
இந்நிலையில் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனுஷ்கா ஷர்மாவுடன் சேர்ந்து மலைப்பகுதியில் நடப்பது போல், ஒரு புகைப் படத்தினை பகிர்ந்துள்ளார் .அதில்’ இருவரும் வாழ்க்கைப் பயணத்தில் ஒன்றுமில்லாமல் நடக்கிறோம். ஆனால் காதல் இருக்கிறது’ எனக் கூறி அனுஷ்கா சர்மாவை டேக் செய்து பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவுக்கு ஒரு மணி நேரத்தில் 3000 கமெண்ட்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.