விவசாய கிணற்றிலிருந்து சட்டவிரோதமாக நீர் எடுத்த திமுக பிரமுகருக்கு சொந்தமான லாரிகளை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த சிறுதாவூரில் தனியாருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் இலவச மின்சாரத்தை பயன்படுத்தி டேங்கர் லாரிகளில் திமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வனஜா ஜெயச்சந்திரன் நீர் எடுத்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அளவுக்கு அதிகமாக எடுக்கப்படும் நீரினால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் இருப்பதை உணர்ந்த பொதுமக்கள், திமுக பிரமுகர் வனஜா ஜெயச்சந்திரனுக்கு சொந்தமான டேங்கர் லாரிகளை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்களின் எதிர்ப்பை சற்றும் எதிர்பார்க்காத லாரி ஓட்டுநர்கள், நீரை குளத்தில் கொட்டிவிட்டு புறப்பட்டுச் சென்றனர்.
Discussion about this post