கருணாநிதி சிலை திறப்பு விழாவில் சட்டவிரோதமாக மின்சாரம் திருட்டு

தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு நிகழ்ச்சியின்போது, திருட்டுத்தனமாக மின்சாரம் எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தி.மு.க.வின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கருணாநிதி, மு.க.ஸ்டாலின் உருவ வடிவில் மின் விளக்குகள் வைக்கப்பட்டுள்ளன. இதற்காக சட்டவிரோதமாக மின்சாரம் திருடப்பட்டுள்ளது.

அதிக வாட்ஸ் கொண்ட மின் விளக்குகளுக்கு சட்டவிரோதமாக இணைப்பு கொடுக்கப்பட்டதால், அருகில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் கிடைக்காமல், குறைந்த வெளிச்சதில் மின்விளக்குகள் எரிந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளன.

ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தை சுற்றி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டள்ளதால், ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல முடியாமல் நடுவழியில் நிறுத்தப்பட்டது. வழி நெடுகிலும் வாகனங்கள் அணி வகுத்து நிற்பதால், ராயப்பேட்டை மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள், சாலையிலேயே காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு நோயாளி உயிருக்கு போராடி வந்த நிலையில், அங்கு பாதுகாப்பிற்காக இருந்த போலீசார், ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல உதவினார்.

Exit mobile version