அசுரன் படத்தில் தனுஷுக்கு இளைய சூப்பர் ஸ்டார் பட்டமா ?

தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணி என்றாலே மாஸ் தான் என்று படத்திற்கு படம் நிரூபித்து வருகின்றனர்.வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சிமா, பாடகர் டீஜே, அம்மு அபிராமி என பல நட்சத்திரங்கள் நடிப்பில் அசுரன் திரைப்படம் இன்று வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், ரசிகர்கள் பலரும் தியேட்டரில் தனுஷின் பெயர் போடுவதற்கு முன் இளைய சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது போல் எடுத்த புகைப்படத்தினை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர்.திடீரென இளைய சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தது ஏன் என அனைவரும் கேள்வி எழுப்ப,அதற்கு பிரபல திரையரங்கம் ஒன்று விளக்கம் கொடுத்துள்ளது.அது படத்திற்கு முன்பு ஒளிப்பரப்பபட்ட mash up வீடியோவில் போடப்பட்ட டைட்டில் என்றும்,படத்தில் இப்படி ஒரு டைட்டில் கொடுக்கவில்லை என்று விளக்கமளித்துள்ளது.

Exit mobile version