சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரத்தில் அவரது தந்தை அப்துல் லத்தீப்பிடம் மீண்டும் இன்று விசாரணை நடைபெறுகிறது.
ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ போன்ற அமைப்பு விசாரணை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் பாத்திமாவின் தந்தை கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தநிலையில் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி தடவியல் துறையில் உள்ள, சில பொருட்களை அடையாளம் காட்டவும், உறுதிப்படுத்தவும் அப்துல் லத்தீப்பிடம் விசாரணை நடைபெறுகிறது. தடயவியல் துறை விசாரணைக்கு பிறகு மீண்டும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்தில் அப்துல் லத்தீப்பிடம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரிக்க உள்ளனர்.
Discussion about this post