துபாய் மற்றும் அமீரகத்தின் பல்வேறு பள்ளிவாசல்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், தென் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் துபாயில் அதிகளவில் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் குவிந்து வரும் நிலையில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி துபாய் மற்றும் அமீரகத்தின் பல்வேறு பள்ளிவாசல்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தொழிலாளர்களின் நலனுக்காக செய்யப்பட்டு வரும் இந்த ஏற்பாட்டில், மேற்கொள்ளப்படும் சமத்துவ பண்பாடு, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. அபுதாபியில் உள்ள மிக பிரசித்தி பெற்ற ஷேக்ஜாயித் கிராண்ட் பள்ளிவாசலில் தினந்தோறும் 30 ஆயிரம் நபர்கள் நோன்பு திறப்பில் கலந்து கொள்கின்றனர்.
இவர்களுக்காக உணவு சமைக்க சுமார் 350 சமையற்காரர்கள் சமையல் பணியல் ஈடுபடுகின்றனர். 7 ஆயிரம் கிலோ அரிசி, 7 ஆயிரம் கிலோ காய்கறிகள், 10 ஆயிரம் கிலோ கோழிக்கறி, 6 ஆயிரம் கிலோ ஆட்டுக்கறியை கொண்டு சுத்தமான முறையில் இங்கு இப்தார் உணவுகள் சமைக்கப்பட்டு பரிமாறப்படுகின்றன. இதுதவிர துபாயில் குவைத் பள்ளி எனப்படும் லூத்தா பள்ளியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
Discussion about this post