கோவையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் மோடி வருகை புரிந்தார். மோடியின் வருகையை எதிர்த்து மதிமுக தலைவர் வைகோ போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், வைகோவின் எதிர்மறை அரசியலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார். தமிழக மக்களுக்கு பலன் தரும் திட்டங்களை தொடங்கிவைக்க வந்திருக்கும் பிரதமரை வைகோ எதிர்த்தால், தமிழக மக்கள் அவரை மன்னிக்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார். தமிழகத்தில் மெகா கூட்டணியை அமைப்போம் என்றும் தெரிவித்தார்.
Discussion about this post