தமிழகத்தில் தந்தை பெரியார் இல்லை என்றால் சமூக நீதியும், இடஒதுக்கீடும் இருக்காது என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பயிற்சி நிறைவு விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தந்தை பெரியாரை பற்றி முழுமையாக அறியாமல் கருத்து சொல்வது, சரியாக அமையாது என்று தெரிவித்தார்.
Discussion about this post