தமிழக அரசின் தீவிர முயற்சியால் திரு.வி.க. நகர் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட்ட அயனாவரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், சித்த மருந்துகள் அடங்கிய பெட்டகத்தை தன்னார்வலர்களிடம் ஒப்படைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள சூழலில் கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டி உள்ளதாக குறிப்பிட்டார். இ-பாஸ் வழங்குவதில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும், அத்தியாவசியத் தேவைகளுக்கு, இ-பாஸ் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு உடனடியாக வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Discussion about this post