குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாம்பழத் துறையாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
குமரி மாவட்டத்தின் மலையோர பகுதிகள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை அணை முழு கொள்ளளவான 48 அடியை எட்டிய நிலையில், அணையின் நீர்மட்டம் 30 அடியாக உயர்ந்துள்ளது. அதே போன்று 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 68.78 அடியை எட்டியுள்ளது. அணையில் இருந்து 200 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Discussion about this post