ஏபி டி வில்லியர்ஸ் மாதிரி ஒரு வீரர் இல்லையென்றால், மிஸ்டர் 360 டிகிரி பட்டத்துக்கு மேக்ஸ்வெல் சொந்தம் கொண்டாடி இருப்பார் என டேல் ஸ்டெயின் கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின், ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் குறித்து கூறுகையில், மைதானத்தில் அனைத்து கோணத்தில் அடித்து ஆடுபவர் ஏபி டி வில்லியர்ஸ். கிரிக்கெட்டில் அனைவராலும் 360 டிகிரி என்று அழைக்கப்படுகிறார். டி வில்லியர்ஸ் மாதிரி ஒரு வீரர் இல்லையென்றால், மிஸ்டர் 360 டிகிரி பட்டத்துக்கு மேக்ஸ்வெல் சொந்தம் கொண்டாடி இருப்பார் என்று தெரிவித்தார்.
இருபது ஓவர் தொடரை பொறுத்தவரையில் பந்தை நன்றாக கவனித்து ஆடும் வீரர்களில் ஒருவர் தான் மேக்ஸ்வெல். அதிரடி மன்னான டிவில்லியர்சுக்கு சற்றும் குறைந்தவர் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான மேக்ஸ்வெல், இவர் இல்லாத டி20 அணியை கடத்த பத்தாண்டில் தேர்வு செய்ய முடியாது என்று தெரிவித்தார்.
டி20 கிரிக்கெட்டில் 160 ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கும் மேக்ஸ்வெல், 3 சதம் மற்றும் 7 அரைசதங்கள் அடித்துள்ளார். ஐ.பி.எல்., பிக்பேஷ் லீக் ஆகிய தொடர்களில் விளையாடி வருகிறார். 13-வது ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் மேக்ஸ்வெல்-யை, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.10.75 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
Discussion about this post