பாகிஸ்தானுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற பி.சி.சி.ஐ.யின் கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிராகரித்துள்ளது. புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகளின் கிரிக்கெட் அணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று பாகிஸ்தானை மறைமுகமாக குறிப்பிட்டு ஐ.சி.சி.க்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுந்தியிருந்தது. எனினும் இதனை ஐ.சி.சி. நிராகரித்துள்ளது.
ஐ.சி.சி. ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் ஸஷாங்க் மனோகர் தலைமையில் துபாயில் நடைபெற்றது. அப்போது, இது போன்ற விவகாரங்களில் தாங்கள் தலையிடுவதில்லை என்பதை ஐ.சி.சி. தெளிவுப்படுத்தியது. பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் பல்வேறு நாட்டு அணிகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று ஆடி வருவதாகவும், இதுபோன்ற கோரிக்கைகளுக்கு அவர்கள் முக்கியத்துவம் அளிப்பதில்லை என்றும் ஐ.சி.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Discussion about this post