ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் உரிய அனுமதி பெற்றே இந்திய கிரிக்கெட் அணி, ராணுவ தொப்பியை அணிந்து ஆடியதாக ஐசிசி தெரிவித்துள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான மூன்றாவது ஒரு நாள் ஆட்டத்தின் போது, புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்து விளையாடினர். மேலும் தங்கள் ஆட்ட ஊதியத்தையும் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கினர். இதற்கு பாகிஸ்தான் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
இதுபோன்ற ராணுவ தொப்பிகளை அணிவதை தடுக்காவிட்டால், காஷ்மீரில் இந்திய ராணுவத்தினர் புரியும் கொடுமைகளை கண்டித்து பாகிஸ்தான் வீரர்களும் மைதானத்தில் கருப்பு பட்டைகளை அணிந்து விளையாட வேண்டியிருக்கும் என்று பாகிஸ்தான் அமைச்சகம் மிரட்டல் விடுத்திருந்தது. இந்நிலையில், ராணுவ தொப்பி அணிந்து விளையாட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. முறையான அனுமதி பெற்றதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
Discussion about this post