அசாமில் இருந்து 13 பேருடன் புறப்பட்ட இந்திய விமான படைக்கு சொந்தமான விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
அசாம் மாநிலம் ஜோர்கட்டிலிருந்து இந்திய விமான படைக்கு சொந்தமான ஐஏஎப் ஏன்-32 ரக விமானம், நண்பகல் 12.25 மணிக்கு புறப்பட்டது. 8 விமானிகள் 5 பயணிகளுடன் அருணாச்சல பிரதேசத்தின் மென்ச்சுக்கா பகுதிக்கு சென்று கொண்டிருந்த விமானம், திடீரென தகவல் தொடர்பை இழந்தது. மதியம் ஒரு மணியளவில் சீன எல்லையில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சுமார் 2 மணி நேரமாக எந்த தகவலும் வராத நிலையில், மாயமான விமானத்தை தேடும் பணியில் சுகோய்-30 எம்கேஐ மற்றும் சி-130 விமானங்கள் ஈடுபட்டுள்ளன.
Discussion about this post