ஆதரவாளர்கள் விரும்பினால் தனிக்கட்சி துவங்கி தேர்தலை சந்திக்க உள்ளதாக மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீட்டிற்கு சென்ற திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜனவரி 3ஆம் தேதி ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளதாகவும், தனது ஆதரவாளர்கள் விரும்பினால் தனிக்கட்சி துவங்க உள்ளதாகவும் தெரிவித்தார். தனிக்கட்சி துவங்குவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்திக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க வாய்ப்புள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், நிச்சயம் வாய்ப்பு இல்லை என அழுத்தமாக அழகிரி கூறினார். கருணாநிதி மகன்களிடையே மோதல் அதிகரித்துள்ளதால், வருகிற தேர்தலில் திமுக இரண்டாக உடைவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
Discussion about this post