கல்லீரல் பாதிப்பு மற்றும் காசநோயிலிருந்து தான் மீண்டது குறித்து நடிகர் அமிதாப் பச்சன் தனியார் தொலைக்காட்சி பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
நேற்று தனியார் தொலைக்காட்சியில் ஸ்வஸ்த் இந்தியா என்ற நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது குறித்தும், அது பற்றிய விழிப்புணர்வு பற்றியும்,மேலும் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் காசநோயிலிருந்து மீண்டது குறித்தும் பேசினார்.
’நான் காசநோயிலிருந்து தப்பித்தவன், ஹெபடைடிஸ் பி என்ற பிரச்சனையிலிருந்து தப்பித்தவன் என்று சொல்வதில் எனக்கு தயக்கமில்லை. உடல் பரிசோதனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நான் தனிப்பட்ட எடுத்துக்காட்டையே கூறுகிறேன்.தவறான ரத்தம் கொடுக்கப்பட்ட காரணத்தால் எனது கல்லீரல் 75 % சதவீதம் வரை பாதிப்பு அடைந்துவிட்டது.பாதிப்பு அடைந்த 20 வருடங்கள் கழித்து நான் தெரிந்து கொண்டதால் மீதம் 25 சதவீதத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
எல்லா நோய்க்கும் சிகிச்சை உண்டு.ஆனால் அதுபற்றி தெரிந்துகொண்டால் மட்டுமே அதற்கான சிகிச்சை பெற முடியும்.உங்களை பரிசோதனைக்கு உட்படுத்த விலை என்றால், நோய் இருப்பதை அறிந்து கொள்ள முடியாது, அதற்கான சிகிச்சையும் பெற முடியாது என்று உடல் பரிசோதனையின் முக்கியத்துவதை பேசினார்.
Discussion about this post