ஆந்திர மாநில ஆளுநராக தான் நியமிக்கப்படவில்லை என முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 5 ஆண்டுகள் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக சுஷ்மா சுவராஜ் பதவி வகித்தார். உடல்நல குறைவு காரணமாக 17வது மக்களவை தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. மேலும் புதிய மத்திய அமைச்சரவையிலும் சுஷ்மா சுவராஜ் இடம்பெறவில்லை. இதனிடையே தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கும் சுஷ்மா சுவராஜ், ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியது.
The news about my appointment as Governor of Andhra Pradesh is not true.
— Sushma Swaraj (@SushmaSwaraj) June 10, 2019
இதனையடுத்து தலைவர்கள் பலரும் அவரை தொடர்புக்கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இந்தநிலையில், தான் ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் உண்மையில்லை என தனது ட்விட்டர் பக்கத்தில் சுஷ்மா சுவராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
Discussion about this post