இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டியில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்திடம் போராடி தோற்றது. முன்னணி பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்காமல் வெளியேற, தோனியும் ஜடேஜாவும் கடைசி வரை போராடினார்கள். இந்த தோல்வியால் இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
மேலும் நேற்று முதல் தோனியின் ஓய்வு குறித்த தகவல்களும் அதிகளவில் சமூக வலைத்தளங்களில் பரவ தொடங்கின.ஆனால் தோனி தரப்பில் அதிகாரப்பூர்வமான தகவல் தெரிவிக்கப்படவில்லை.
Not sure if you are playing on but thanks @msdhoni You have given the game so much. Always admired your calmness and self belief. #CWCUP2019 @BCCI
— Adam Gilchrist (@gilly381) July 11, 2019
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் தோனியை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
அதில், “ தொடர்ந்து நீங்கள் விளையாடுவீர்களா என தெரியாது. ஆனால் கிரிக்கெட்டுக்காக நிறைய கொடுத்து விட்டீர்கள். நான் எப்போதும் உங்களின் அமைதியையும், தன்னம்பிக்கையையும் பாரட்டுவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post