விடுதலை போராட்ட வீரர் இராமசாமி படையாச்சியார் பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்வுக்காக போராடியவர் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.
விடுதலை போராட்ட வீரர் இராமசாமி படையாச்சியாரின் 104வது பிறந்தநாளையொட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், இராமசாமி படையாச்சியார் பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்வுக்காக போராடியவர் என்றும் மிக பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை உருவாக்க காரணமானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். வடமாவட்டங்களில் சுதந்திர வேட்கையை விதைத்தவரும், உள்ளாட்சித் துறை அமைச்சராக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவருமான இராமசாமி படையாச்சியார் பிறந்த நாளில் அவர்தம் புகழை போற்றி வணங்குவதாகவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள இராமசாமி படையாச்சியார் உருவப் படத்திற்கு அஇஅதிமுக சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், எம்.சி.சம்பத் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Discussion about this post