பேட்டரி மூலம் இயங்கும் 50 ஆயிரம் கார்களை ஹூண்டாய் நிறுவனம் உற்பத்தி செய்து, அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளதாக அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு நடைபெவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முதலீட்டார்களுக்கான சிறப்பு கூட்டம் கடலூரில் நடைபெற்றது. இதில் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், ஹூண்டாய் கார் நிறுவனம் இந்தியாவில் முதல்முறையாக 7000 கோடி ரூபாய் முதலீட்டில் பேட்டரி மூலம் இயக்கப்படும் 50 ஆயிரம் கார்களை உற்பத்தி செய்ய உள்ளதாகவும் இவை 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க அரசுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும், தொழில் துறையில் தமிழகம் சிறந்து விளங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post