டெல்லி கலவரம் தொடர்பாக, சமூக வலைத்தளங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக, நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தகவல் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியின் வடகிழக்கு பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்ததில் பலர் பலியாகினர். இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த அமைச்சர் நித்யானந்த் ராய், தலைநகரில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க டெல்லி காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றும், சமூக வலை தளங்களில் வதந்தி மற்றும் போலி பிரசாரம் செய்வதை அரசு தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றும் தெரிவித்தார்.
Discussion about this post