டால்பின்களைப் போன்று ஹம்பேக் திமிங்கலங்களும் காற்றுக் குமிழ்கள் மூலம் வேட்டையாடுவது கடல் ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
மீன்களை வேட்டையாட வரும் சிலவகை டால்பின்கள் மீன்களைச் சுற்றி காற்றுக் குமிழ்களை ஏற்படுத்தி, அதன் மூலம் குழப்பத்தை உண்டாக்கிவேட்டையாடும் தன்மை கொண்டவை. அதேபோல் ஹம்பேக் வகை திமிங்கலங்களும் வேட்டையாடுவது சமீபத்தில் தெரியவந்துள்ளது.
தென்கிழக்கு அலாஸ்காவின் கடல் பகுதியில் வலம் வந்த சில திமிங்கலங்கள் மீது ஆய்வாளர்கள் கேமராவைப் பொருத்தி ஆய்வு நடத்தினர். அப்போது பிராண வாயுவை உறிஞ்சும் திமிங்கலங்கள் நீருக்கடியில் சென்று அவற்றை சீரான இடைவெளியில் காற்றுக் குமிழ்களாக வெளி விடுகின்றன. இந்தக் குமிழுக்குள் சிக்கும் மீன்களை சாவகாசமாக திமிங்கலங்கள் சாப்பிடுவது தெரியவந்துள்ளது. ஹம்பேக் திமிங்கலங்கள் இதுபோன்று வேட்டையாடுவது தற்போதுதான் தெரியவந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
Discussion about this post