காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என ஐ.நா.மனித உரிமை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் 42-வது வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மிச்சேல் பேச்சலெட், இந்தியாவும், பாகிஸ்தானும் காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும், அவர்கள் அடிப்படை பாதுகாப்பு வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். காஷ்மீரில் அடிப்படை சேவைகளை மக்கள் பெறும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்து தடை உத்தரவுகளையும் திரும்பபெற வேண்டும் எனவும் மேலும் காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா மனித உரிமை ஆணையம் தொடர்ந்து கண்காணித்து வரும் என்றும் கூறினார்.
Discussion about this post