நூறு சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தி மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் காஞ்சிபுரம் பெருநகராட்சி அருகே மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அனைவரும் 100% வாக்களிப்போம், பணம் வாங்காமல் வாக்கு அளிப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த மனித சங்கிலி விழிப்புணர்வு கச்சபேஸ்வரர் ஆலயத்தில் தொடங்கி பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மனித சங்கிலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Discussion about this post