உலகில் கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதற்கு, இயற்கை காரணம் அல்ல, மனிதச் செயல்பாடுகள் தான் காரணம் என்பது, புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
மனித உற்பத்தி மற்றும் பல நடவடிக்கைகளால், புவி வெப்பமடைந்து, கடல் நீர் மட்டம் சராசரி அளவைவிட அதிகமாகவும், வேகமாகவும் உயர்ந்து வருகிறது. உயர் தொழில்நுட்பம் மூலமாக, 1993-ம் ஆண்டு முதல் கடல் நீர்மட்ட உயர்வை ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி, அண்டார்டிகா மற்றும் அமெரிக்க மேற்குக் கடற்கரைப் பகுதிகளைச் சுற்றியுள்ள கடல் நீர்மட்டம், ஆண்டு சராசரியைக் காட்டிலும் குறைவாக உயர்ந்தால், அமெரிக்க கிழக்கு கடல் மற்றும் தெற்காசியாவில் சராசரியைக் காட்டிலும் அதிகம் கடல் நீர்மட்டம் உயர்வதாக ஆய்வு கூறுகிறது.
சில பிராந்தியங்களில் உள்ளூர் கடல் நீர்மட்ட அதிகரிப்பு, உலக சராசரியைக் காட்டிலும் இருமடங்கு அதிகமாக உள்ளதும் தெரியவந்துள்ளது. இது மனித காரணங்களினால் ஏற்படும் பருவநிலை மாற்றங்களினாலேயே என்றும் இயற்கையாக மாறும் கடல்சார் சூழல்களினால் அல்ல என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதனால், இது இயற்கை மாற்றம் என்று தவறாக கணிக்கக் கூடாது என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது.