வார விடுமுறையை கொண்டாட, கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள், முகக்கவசம் அணியாமல் திரண்டதால், கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில், வார விடுமுறை காரணமாக, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக, வெளி மாவட்டங்களில் இருந்து அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.
கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத் தலங்கள் திறக்கபடாத நிலையில், வெள்ளி நீர் வீழ்ச்சியின் அழகை, சுற்றுலாப் பயணிகள் கண்டுரசித்தனர்.
அதே போன்று, ஏரி சாலையில் குதிரை சவாரி மற்றும் சைக்கிள் சவாரி மேற்கொண்டனர்.
அதே சமயம், சுற்றுலாப் பயணிகள் பலர் முகக்கவசம் அணியாமல் இருந்தது, கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிப்பதை, காவல்துறை உதவியுடன் தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Discussion about this post