தீபாவளியை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் இயக்கப்பட்ட 28 ஆயிரத்து 360 பேருந்துகளில் 13 லட்சத்து 24 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளதாகவும், முன்பதிவு வாயிலாக 5 கோடியே 84 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
தீபாவளியை ஒட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர சென்னை உப்பட பிற மாவட்டங்களில் இருந்து தினசரி பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தீபாவளிக்கு முன்பும், பின்பும் என 7 நாட்களில் மொத்தமாக 28 ஆயிரத்து 360 பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், அதில், 13 லட்சத்து 24 ஆயிரத்து 553 பயணிகள் பயனம் செய்துள்ளதாக போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளில் ஒரு லட்சத்து 21 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளதாகவும், முன்பதிவுகள் மூலம் 5 கோடியே 84 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
Discussion about this post