திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பலவகை மலர்களால் உருவாக்கப்பட்டுள்ள குதிரை மனிதன் உருவம் சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்த்துள்ளது.
கோடை விடுமுறையையொட்டி கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை தருகின்றனர். இவ்வாறு வருகை தரும் சுற்றுலா பயணிகள் பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் டேலியா, ரோஸ், ஆண்ட்ரியம், உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட வண்ண மலர்களால் அதிகம் ஈர்க்கப்படுகின்றனர்.
குறிப்பாக, நார்னியா படத்தில் வரும் குதிரை மனிதன் போன்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள குதிரை மனிதன் காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளை கவர மேலும் பல்வேறு உருவங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட உள்ளதாக பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்தனர் .
Discussion about this post