ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன?
ஹோண்டா நிறுவனம் உதிரிபாக சப்ளையர்களுக்கும் ஆண்டுக்கு 12,000 கார்களை உற்பத்தி செய்வதற்கான இலக்கு வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தது. ஆனால், இந்திய கார் சந்தையில் நிலவும் மந்த நிலை காரணமாக, அதனை ஆண்டுக்கு 8,000 கார்கள் உற்பத்தி என்று இலக்கை குறைத்து சப்ளையர்களுக்கு தகவல் தெரிவித்தது.
ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவிக்கான உதிரிபாகங்களை 30 சதவீதத்திற்கு மேல் இந்தியாவில் பெறுவதற்கு ஹோண்டா கார் நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. ஆனால் அந்த இலக்கை அடைவதில் கடும் சவால்கள் எழுந்துள்ளன.
இதனால், போட்டியாளர்களைவிட விலையை சவாலாக நிர்ணயிக்க முடியாது. எனவே, எச்ஆர்வியை அறிமுகம் செய்து நஷ்டம் அடைய ஹோண்டா கார் நிறுவனம் விரும்பவில்லை என்று தெரிகிறது.
இந்த சூழ்நிலையில், எச்ஆர்வி எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்யும் திட்டத்தை ஹோண்டா கார் நிறுவனம் கடைசி நேரத்தில் ரத்து செய்துள்ளதாக ஆட்டோகார் புரோஃபஷனல் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.