சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கொடைக்கானலில் புகழ்பெற்ற ஹோம்மேட் சாக்லெட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் தற்போது பனிப்பொழிவு குறைந்து இதமான தட்பவெப்ப நிலை நிலவருகிறது. இதமான காலநிலையை அனுபவிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், புகழ்பெற்ற ஹோம்மேட் சாக்லெட் தயாரிக்கும் பணியில் பேக்கரி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில், பாதாம், பிஸ்தா, தேன், முந்திரி, பழவகை, திராட்சை, பால் உள்ளிட்ட பல ஃப்ளேவர்களில் ஹோம் மேட் சாக்லேட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
Discussion about this post