தருமபுரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால், பரிசல் ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்து மகிழ தமிழகம் மட்டும் இன்றி கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குவிவது வழக்கம். இந்த நிலையில் கோடை விடுமுறையை கொண்டாட நண்பர்களுடனும், குடும்பத்துடனும் இன்று அதிகாலை முதலே வரத் தொடங்கிய சுற்றுலா பயணிகள் ஆயில் மசாஜ் செய்தும், மெயினருவியில் குளித்தும் மகிழ்ந்தனர். பரிசல் சவாரி செய்தும், ஐந்தருவி, சினி பால்ஸ், வீவ் பாயிண்ட் போன்ற பகுதிகளை கண்டுகளித்தனர். ஒகேனக்கல்லில் சிறப்பு வாய்ந்த மீன் சமையல் செய்தும் சாப்பிட்டு மகிழ்ந்தனர். ஒகேனக்கல்லில் கூட்டம் அதிகரித்ததால் வணிகர்கள், பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Discussion about this post