எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு பாதிப்பு இல்லை: குழந்தையின் தந்தை தகவல்

எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விருதுநகர் கர்ப்பிணி பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று பாதிப்பு இல்லை என குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி மாதம் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ளதா? என ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டது.

சோதனையில் குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று இல்லை என அறிக்கை வந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குழந்தையின் தந்தை தகவல் அளித்துள்ளார். முதல் பரிசோதனையில் எச்ஐவி தொற்று இல்லை எனவும், இரண்டாவது பரிசோதனை 6 மாதத்திற்கு பிறகு எடுக்கப்படும் என்றும், மூன்றாவது பரிசோதனை ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு எடுக்கப்பட்டு அதன் பின்பே இறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version