எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது

எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

கடந்த மாதம் சாத்தூர் அரசு மருத்துவமனையில், கர்ப்பிணி பெண் ஒருவருக்கு தவறுதலாக எச்ஐவி தொற்று ரத்தம் செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அந்த பெண், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குழந்தைக்கு, தாய்ப்பால் கொடுக்க முடியாது என்றும், 45 நாட்களுக்குப் பிறகுதான் குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ளதா என்பதை பரிசோதனை செய்ய முடியும் என்றும் மருத்துவமனை முதல்வர் சண்முக சுந்தரம் கூறினார்.

Exit mobile version