பிரிட்டனில் ஹிட்லரை பின்பற்றும் நாஜி தம்பதியர் தங்களின் குழந்தைக்கு அடால்ஃப் என்று பெயர் வைத்துள்ளது பிரிட்டனில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அடால்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கியவர். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் இட்லரின் நாசிப்படைகள் வீழ்ச்சியுற்றது. ஹிட்லரும் தற்கொலை செய்து கொண்டார் என்பது வரலாறு.
பிரிட்டன் நாட்டை சேர்ந்த தம்பதிகளான 22 வயது ஆடம் தாமஸ் மற்றும் 38 வயது க்ளவுடியா படடஸ் நாஜி தத்துவங்களை ஏற்று வாழ்ந்து வருகின்றனர். ஹிட்லர் மீது உள்ள அதீத பற்று காரணமாக தங்களது குழந்தைக்கு அடால்ஃப் எனப் பெயர் சூட்டியுள்ளனர்.
தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டு பிரிட்டன் காவல்துறையால் தம்பதியரை கைது செய்தனர்.
நீதிமன்றத்திற்கு சென்ற இந்த வழக்கில், இவ்விருவருக்கும் வன்முறையை தூண்டும் இனவெறி குறித்த நம்பிக்கைகள் இருந்ததற்கான நெடிய வரலாறு இருக்கிறது என்று கூறி தம்பதியருக்கு, நீதிபதி 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
Discussion about this post