மேகதாதுவில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் திட்டத்தை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் பன்வாரிவால் புரோகித், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்னைகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை, அரசு தீவிரமாக பாதுகாக்கும் என்று தெரிவித்தார். உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறியும், தமிழ்நாடு அரசின் அனுமதியின்றியும், காவிரி மற்றும் அதன் கிளை நதிகளின் குறுக்கே, எந்தவொரு நீர்த்தேக்கத்தையும் கட்டுவதை அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக ஆளுநர் தனது உரையில் கூறியுள்ளார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி கர்நாடக அரசால் முன்மொழியப்பட்ட மேகதாது திட்டத்தை நிராகரிக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்துவதாக ஆளுநர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி பெரியாறு ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கேரளா அரசாங்கத்தை அனுமதிக்க கூடாது என்று மத்திய அரசை கேட்டுக்கொண்டார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி பெரியாறு ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கேரளாவை அனுமதிக்க கூடாது
முல்லை பெரியாறு அணையை வலுப்படுத்த மீதமுள்ள பணிகளை மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்க வேண்டும்
தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையை தொடர்வதற்கு இந்த அரசாங்கம் முழுமையாக உறுதியளித்துள்ளதாகவும், அதில் மாற்று கருத்து இல்லை என்றும் தெரிவித்தார்.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைகள் குறித்து ஆராய்வதற்காக 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையை தொடர அரசு உறுதியளித்துள்ளது, இதில் மாற்று கருத்து இல்லை.
Discussion about this post