இந்திய பங்கு சந்தைகள் இன்று உயர்வுடன் நிறைவடைந்தன…
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 92 புள்ளிகள் அதிகரித்து, 38 ஆயிரத்து 598 புள்ளிகளாக வர்த்தகமாகி நிறைவடைந்தன. இதேபோல், தேசியப் பங்குச் சந்தை குறியீடான நிப்டி 35 புள்ளிகள் உயர்ந்து, 11 ஆயிரத்து 464 புள்ளியாக வர்த்தகமாகி நிறைவடைந்தன. உலகப் பங்குச் சந்தைகள் இன்று ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தன.
அமெரிக்கப் பங்குச் சந்தை குறியீடான நாஸ்டேக் 8 ஆயிரத்து 148 புள்ளிகளுடனும், லண்டன் பங்குச் சந்தை குறியீடான FTSE 7 ஆயிரத்து 198 புள்ளிகளுடனும், பிரான்ஸ் பங்குச் சந்தை குறியீடான CAC 5 ஆயிரத்து 684 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி நிறைவடைந்தன.
ஜெர்மனி பங்குச் சந்தை குறியீடான DAX, 12 ஆயிரத்து 623 புள்ளிகளுடனும், ஜப்பான் பங்குச் சந்தை குறியீடான NIKKEI, 22 ஆயிரத்து 472 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி நிறைவடைந்தன. ஹாங்காங் பங்குச் சந்தை குறியீடான HANG SENG, 26 ஆயிரத்து 664 புள்ளிகளுடனும், சீனப் பங்குச் சந்தை குறியீடான Shaz, 2 ஆயிரத்து 978 புள்ளிகளுடன் வர்த்தகமாகி நிறைவடைந்தன.
Discussion about this post