தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக கஞ்சா, அபின், தங்கம் போன்றவற்றை கடத்துவதை தடுக்கும் விதமாக தமிழக கடலோர பாதுகாப்பு குழுவினருக்கு அதிவேக நவீன ரோந்து படகுகள் வழங்கப்பட்டது. இரண்டு அதி நவீன படகுகளும் சமீபகாலமாக பழுது காரணமாக நிறுத்தி வைக்கப்படிருந்தது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் தங்க கட்டிகள் நாகையில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட இரு அதி நவீன படகுகளும் 48 லட்ச ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு மீண்டும் இயக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. கடலோர காவல் குழுவினர் இன்று அப்படகுகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
Discussion about this post