மகாராஷ்டிர மாநிலத்தில் பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த சில தினங்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவிவருகிறது. இதனால் மக்கள் அதிகாலை வேளைகளில் வெளியில் வர முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
காலை வேளைகளில் நடைபயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. பனிப்பொழிவு அதிகமாக காணப்படுபவதால் எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியாத நிலை காணப்படுகிறது. இதனால் காலை வேளைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.
கம்பளிகளுக்கு பெயர்போன மகாராஷ்டிராவின் சோலாப்பூர் நகரம் அதிக பனிப்பொழிவால் முடங்கியுள்ளது.