போக்குவரத்து துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களுக்காக ஆயிரத்து 107 பேருந்துகள் கொள்முதல் செய்யும் டெண்டரில், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில், தாழ்தள பேருந்துகளையும் கொள்முதல் செய்ய உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னையில் தாழ்தள பேருந்துகளை எந்தெந்த சாலைகளில் இயக்க முடியும், எந்தெந்த சாலைகளில் இயக்க முடியாது என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை வரும் 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

YouTube video player

Exit mobile version