கொரோனா தடுப்பு விதிகளுடன் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
டிசம்பர் 27 முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரையிலான சனிப்பெயர்ச்சி விழாவில் பக்தர்களை அனுமதிக்க கூடாது என, ஸ்தானிகர் சங்க தலைவர் நாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, கோயிலுக்குள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கவும், நள மற்றும் பிரம்ம தீர்த்தங்களில் புனித நீராட தடை விதித்து, கொரோனா விதிகள் கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என்றும் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா நடத்த அனுமதி வழங்கி, முகக்கசவம் அணியாமல் எவரையும் கோயிலுக்குள் அனுமதிக்க கூடாது என்றும், கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Discussion about this post