லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா போராளிகளைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாலஸ்தீனத்தை தளமாகக் கொண்ட ஹிஸ்புல்லா போராளிகள் லெபனான் நாட்டில் பயிற்சி எடுத்து வருகின்றனர். இதையறிந்த இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியாக லெபனான் அரசு கூறியுள்ளது. இதனிடையே லெபனான் எல்லைப்பகுதியில் உள்ள தங்கள் ராணுவ தளங்கள் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு பதிலடியாக தாங்கள் தாக்கியதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் மத்திய கிழக்கில் அமைதியைக் கெடுக்கும் வகையில் இஸ்ரேல் செயல்பட்டு வருவதாகக் கூறியுள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர், அந்நாடு ராக்கெட்டுக்களை வீசி தாக்கியதில் யாருக்கும் காயமேற்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
Discussion about this post