வேலூரில் உள்ள பேரணாம்பட்டு அருகே உள்ள குண்ட்ளபள்ளி கிரமாத்தில் விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அக்கிராமத்தின் மக்களுடன் சேர்ந்து வரலாற்று மாணவர்கள் சிலரின் உதவியுடனும் இந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்தது என்று கூறப்படுகிறது. இது 16 மற்றும் 17ஆம் நூற்றாண்டு காலகட்டத்தைச் சேர்ந்ததாக கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன. இந்த நடுகல் 5 அடி நீளமும் 3 அடி உயரமும் கொண்டது.
நடுகல் என்பது இறந்து போன வீரன் ஒருவனுக்காக எழுப்பப்பட்டது ஆகும். இது நமது தமிழர் பண்பாட்டின் முக்கிய அம்சமாகும். இந்தக் கல்வெட்டில் இருப்பவர் கூட ஒரு தமிழ் வீரர் தான் என்று சொல்லப்படுகிறது.