மதுராவில் உள்ள ஸ்ரீ ராதா ராமன் கோயிலில் நடைப்பெற்ற ஹரியாலி தீஜ் பூஜையில் மதுரா தொகுதியின் மக்களவை பாஜக உறுப்பினர் ஹேமமாலினி நடனமாடி வழிபட்டார்.
பசுமையான வளர்பிறை நாட்களில், எல்லா விதமான நலன்களும் வளங்களும் கிடைக்க வேண்டி வடமாநிலங்களில் பெண்கள் ஹரியாலி தீஜ் பூஜையில் வழிபடுவார்கள். இந்த நாட்களில் பெண்கள், குழந்தைகள் எல்லாரும் பச்சை நிறத்தில் புது உடைகள் மற்றும் நகைகள் அணிந்து, மரங்களில் ஊஞ்சல் அமைத்து மலர்களாலும் பசுமை கொடிகளாலும் அலங்கரித்து அதில் விளையாடி மகிழ்வார்கள். இந்த பண்டிகை மூன்று நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.
இந்தநிலையில், உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஸ்ரீ ராதா ராமன் கோயிலில் நடைப்பெற்ற ஹரியாலி தீஜ் பூஜையில் மதுரா தொகுதியின் மக்களவை பாஜக உறுப்பினர் ஹேமமாலினி நடனமாடி வழிபட்டார்.
Discussion about this post