உதகையில் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும், அக்டோபர் இறுதி முதல் பிப்ரவரி மாதம் வரை குளிர்காலம் இருக்கும். தற்போது, வழக்கத்தைவிட கடுமையாக பனிப்பொழிவு காணப்படுகிறது. உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெப்பநிலை 4 டிகிரி செல்சியதாக குறைந்திருக்கிறது.
தலைகந்தா, எச்.பி.எப், ரேஸ்கோர்ஸ் பகுதிகளில் புல்வெளிகள் வெண் போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது பனி படர்ந்துள்ளது. கடுங்குளிரால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். சுற்றுலாத் தளங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
Discussion about this post