நீலகிரி மாவட்டம் உதகையில் உறைபனி பொழிவு தொடங்கி உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மலை மாவட்டமான நீலகிரியில் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை குளிர்காலத்தில் அதிகப்பட்ச பனி மூட்டம் காணப்படும். அந்த வகையில் இந்தாண்டு, நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த தொடர் மழையால், இங்கு குளிர் காலம் இரண்டு மாதங்கள் காலதாமதமாக தொடங்கியுள்ளது. அதிகாலையில் குதிரை பந்தய மைதானம், காந்தல், தலை குந்தா, தீட்டுக்கல், கேத்தி ஆகிய பகுதிகளில் உறை பனி பொழிவு காணப்பட்டது. பச்சை புல்வெளிகளில் வெள்ளை கம்பளம் போர்தியது போல அரை அங்குலத்திற்கு பனி உறைந்து காணப்பட்டது. இன்று காலை குறைந்த பட்சமாக வெப்பநிலையாக 2 டிகிரி செல்சியஸ் பதிவானது.
Discussion about this post