மக்களவைக்கு முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 91 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால், தேர்தல் பொருட்களை அனுப்பும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
543 உறுப்பினர்களை கொண்ட மக்களவைக்கு ஏழு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஆந்திரா, அருணாசல பிரதேசம், அசாம், பிகார், காஷ்மீர், மகாராஷ்டிரா உள்பட 18 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலை ஒய்ந்தது.
இதேபோன்று 175 உறுப்பினர்களை கொண்ட ஆந்திர சட்டசபைக்கு ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடைபெறுகிறது. சிக்கிமில் 32 சட்டசபை தொகுதிகள், ஒடிசாவில் உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து, மின்னணு இயந்திரங்கள் உட்பட தேர்தல் பொருட்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
Discussion about this post